சுபமுகூர்த்தங்கள்
குறிப்பு- சோதிடசிகாமணி எனும் பெரியவருஷாதி நூலின் அடிப்படையில் திருமணமுகூர்த்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன, அதனால் சில குறிப்பிட்ட மாதங்களுக்கு முகூர்த்தம் குறிப்பிட வில்லை. மேலும் திருக்கணித முகூர்த்தங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.
கி - கிருஷ்ணபக்ஷம் (தேய்பிறை): சு -சுக்ல பக்ஷம் (வளர்பிறை) கிருஷ்ண பட்சம் (தேய்பிறையைப் பொருத்த அளவில் ஒரு பகுதி நிலவினைக் கருத்தில் கொண்டு சஷ்டித்திதி- ஆறாம் பிறை வரை முகூர்த்தம் குறிக்கப்பட்டுள்ளன மரபில் வழுவாமல் சுபமுகூர்த்தங்கள் கணிக்கப்பட்டுள்ளன.)
முகூர்த்த விதானம்
திருமண சுபமுகூர்த்தங்கள் குறிக்கும் முறை.
முகூர்த்த லக்கினத்திற்கு 3,6,11- இல் பாபர் நன்று, 8-இல் குரு
இருக்கக்கூடாது, 6,8-இல் புதன்,சுக்கிரன், கெடுதி, 2,3-இல்
சந்திரன் நன்று, 7-இல் எவருந்தீயர்.
நட்சத்திரங்களில் ரோகிணி,மிருகசீரிஷம்,
மகம்,உத்திரம்,அஸ்தம்,சுவாதி, அனுசம், மூலம்,உத்திராடம்,
திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி. சிறப்புடையன.
அசுவனி, புனர்பூசம், பூசம், சித்திரை,அவிட்டம், சதயம் ஏற்றுக்
கொள்ளப்படத்தக்கன.
ரிசபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, கும்ப
லக்கினங்கள் தவிர மற்ற லக்கினங்களில் சுபமுகூர்த்தங்கள்
வைக்கக்கூடாது.
துதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி,
துவாதசி, திரயோதசி திதிகளில் சுபமுகூர்த்தம் வைக்கலாம்.
தேய்பிறையில் பஞ்சமி வரை திருமண சுபமுகூர்த்தங்கள்
வைக்கலாம், வளர்நிலவில் பஞ்சமிதிதிக்கு மேல் திருமண
சுபமுகூர்த்தங்கள் வைக்க வேண்டும்.
மணமகனின் ஜன்ம, ஜன்மானு, திரிஜென்ம நட்சத்திரங்களில்
திருமண சுபமுகூர்த்தங்கள் வைக்க்கூடாது, மணமகளின் ஜன்ம,
ஜன்மானு, திரிஜென்ம நட்சத்திரங்களில் திருமண
சுபமுகூர்த்தங்கள் வைக்கலாம்.
குரு, சுக்கிரன் அஸ்தமனமாகும் மாதங்களில் திருமண
சுபமுகூர்த்தங்கள் வைக்கலாகாது.
ஜன்ம, ஜன்மானு, திரிஜென்ம நட்சத்திரங்கள்
அசுவனி, மகம், மூலம்.
பரணி, பூரம், பூராடம்.
கிருத்திகை, உத்திரம், உத்திராடம்.
ரோகிணி, அஸ்தம், திருவோணம்.
மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்.
திருவாதிரை, சுவாதி, சதயம்.
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி.
பூசம், அனுசம், உத்திரட்டாதி.
ஆயில்யம், கேட்டை, ரேவதி.
உதாரணம்- மணமகனின் நட்சத்திரம் அசுவனி எனில் அசுவனி,
மகம், மூலம். ஆகிய நட்சத்திரங்களில் திருமண
சுபமுகூர்த்தங்கள் வைக்கலாகாது.
குறிப்பு ;
இவ்வாண்டு தை திங்களில் சுக்கிரன் அஸ்தமனமாக இருப்பதால் சுபமுகூர்த்தங்கள் இல்லை, சிலர் நாட்காட்டியில் பார்த்தும், திருமணமண்டபங்களுக்கு இருக்கும் கிராக்கியை மனதில் கொண்டும் முகூர்த்தங்களை வைத்து விட்டிருப்பர், மணமக்களின் சௌபாக்கியமன வாழ்க்கைக்கு முகூர்த்த லக்கினத்தினால் எவ்வித ஊறும் வராமலிருக்க, தங்கள் குலதெய்வத்திற்கோ அல்லது இஷ்ட தெய்வத்திற்கோ பூஜைசெய்யவும் மேலும், காலதோஷத்தால் தீயபலன்கள் அண்டாதிருக்க வினையகருக்கும் பூஜை செய்யவும், மணமக்களின் நல்வாழ்விற்கு சங்கல்ப்பம் செய்து பிறகு மாங்கல்ய தாரணம் செய்யவும்.