இறையருள் நிறைக!
சுபமுகூர்த்தங்கள்
குறிப்பு- சோதிடசிகாமணி எனும் பெரியவருஷாதி நூலின் அடிப்படையில் திருமணமுகூர்த்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன, அதனால் சில குறிப்பிட்ட மாதங்களுக்கு முகூர்த்தம் குறிப்பிட வில்லை. மேலும் திருக்கணித முகூர்த்தங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.
சில பொதுவான சந்தேகங்களும் விளக்கங்களும்.
1. பிறந்த நாளில் திருமணம் செய்யலாமா?
பிறந்த நாள் என்பது இங்கு நட்சத்திரத்தையே குறிக்கும் சிலர் ஆங்கிலத்தேதியையும், அல்லது கிழமையையும் நாள் என்று தவகறாகப்புரிந்து கொள்கின்றனர்.
2.பிறந்த நட்சத்திரத்தில் முகூர்த்தம் வைக்கலாமா?
மணப்பெண்ணின் ஜென்ம நட்சத்திரத்தில் முகூர்த்தம் வைக்கலாம். முகூர்த்தங்களுக்கு உகந்த நட்சத்திரமாய் இருப்பினும் மணமகனின் ஜன்ம, ஜன்மானு, திரிஜென்ம நட்சத்திரங்களில் முகூர்த்தம் வைக்கக்கூடாது. அதாவது பிறந்த ஜென்ம நட்சத்திரம் அதற்கு ஒன்பதாம் நட்சத்திரம், அதற்கு ஒன்பதாம் நட்சத்திரம். கீழ்வரும் பட்டியல் மூலம் அதனை எளிதில் தெரிந்தப கொள்ளலாம்.(உதாரணமாக மணமகனின் நட்சத்திரம் மகம் எனில் மூலம், அசுவனி ஆகியவை முறையே ஜென்மானு, திரிஜென்ம நட்சத்திரங்களாகும்)
அசுவனி |
மகம் |
மூலம் |
| பரணி் | பூரம் | பூராடம் |
| கார்த்திகை | உத்திரம் | உத்திராடம் |
| ரோகிணி் | அஸ்தம் | திருவோணம் |
| மிருகசீரிஷம் | சித்திரைம் | அவிட்டம் |
| திருவாதிரை | சுவாதி் | சதயம் |
| புனர்பூசம் | விசாகம் | பூரட்டாதி் |
| பூசம் | அனுசம் | உத்திரட்டாதி் |
| ஆயில்யம் | கேட்டை | ரேவதி் |
3. திருமணத் தேதி குறித்தபின்ப வயதானவர்கள் யாராவது இறந்து விட்டால் திருமணம் வைக்கலாமா?
திருமணத்தைக் குறித்த முகூர்தத்திலேயே தாராளமாக செய்யலாம். இறப்பு நிகழ்ந்த வீட்டில் திருமணத்தைத்தவிர வேறு சுபகாரியங்கள் செய்யக்கூடாது என்பது விதி.
4. நாட்காட்டிகளில் குறிக்கப்பட்டிருக்கும் முகூர்த்தங்களை எல்லோரும் பயன்படுத்தலாமா?
பொதுவாக இப்பொழுது எல்லா நாட்காட்டிகளிலும் முகூர்த்த நாட்கள் குறிக்கப்படாடுள்ளன, முன்கூட்டியே திருமணமண்டபத்தை பதிவு செய்வதற்கு அம்முகூர்த்தங்களையே பலர் பின்பற்று கின்றனர், மணமக்களுக்கு சந்திராஷ்டமி நாளாக அமைகிறதா, முன்பு கூறியபடி மணமகனுக்கு கற்பு நாள் என்று கூறப்படும் ஜன்ம,ஜென்மானு,திரிஜென்ம நட்சத்திரமாக அமைகின்றதா என்று ஜோதிடரிடம் கேட்டு அறிந்து கொள்வது நல்லது. மேலும் நாட்காட்டிக்கு முகூர்த்தங்களைக் குறித்துத்தருவோர், சில சிறப்பு விதிகளை அனுசரித்துக் குறிப்பதில்லை என்பது எல்லாஜோதிடர்களும் ஏற்றுக்கொண்ட கருத்து. முகூர்த்த லக்கினத்திற்கு 7ஆம் வீட்டில் என்த கிரகமும் இருக்கக்கூடாது, 8இல் குரு இருக்கக்கூடாது, குரு, சுக்கிரர் அஸ்தமன காலத்தில் முகூர்த்தம் வைக்கக்கூடாது எனப்பல விதிகள் உள்ளன அவைகளையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே நாட்காட்டி முகூர்த்தங்களைப் பயன்படுத்தும் முன் ஜோதிடரை ஆலோசிப்பது நல்லது.
5.தவிர்க்க முடியாத காரணத்தால் சுபமுகூர்தம் இல்லாத நாளில் திருமணம் செய்யவேண்டிய நிலை வந்தால் அல்லது குறித்த முகூர்த்த லக்கினத்தில் தாராமுகூர்த்தம் செய்யமுடியாது போகும் பட்சத்தில் என்ன செய்வது?
அவ்வாறான நேரத்தில் வினாயகருக்கு பால் அபிஷேகம் செய்து காலதோசத்தால் தீயபலன்கள் வராமல் காத்து அருளவேண்டும் என வேண்டிக்கொள்ளலாம், குலதெய்வத்தின் கோவிலுக்குச்சென்று பூஜிப்பதும் நல்லது மேலும் சாந்திமுகூர்த்தத்தை நல்ல நாளில் வைத்துக்கொள்ளவும் வேண்டும்.







