ஆற்றின் ஒழுகி அறனிழுக்கா இல்வாழ்க்கை

நோற்பாரின் நோன்மை உடைத்து.

-தமிழ்மறை

திருமண காலம்:

சரியான கிரகநிலை, தசை,புத்தி நடக்கும் போது நம்
குழந்தைகளுக்கு திருமண முயற்சியைத்துவங்கும் போது
வீண்அலைச்சலும், மனதுயரும் படவேண்டிதில்லை. சிலர்
தவறான காலத்தில் திருமண முயற்சியை மேற்கொண்டு
சலிப்படைந்து விடுகின்றனர்.
பின்வரும் கோச்சார, தசா புத்திகளை நீங்களே உங்கள்
குழந்தைகளின் ஜாதக புத்தகத்தில் பார்த்து திருமண காலத்தை
எளிமையாக கண்டு கொள்ளலாம்.
1. ராசி (இராசி சக்கரத்தில் சந்திரன் இருக்கும் வீடு) அதிலிருந்து
அந்த ஆண்டின் பஞ்சாங்கத்தில் குரு இருக்கும் வீடு வரை
எண்ணவும் அப்படி எண்ணும் போது, 2,5,7,9,11 ஆம் வீடுகளில்
குரு கிரகம் இருப்பின் குருபலன் உண்டு என்று கொண்டு
திருமண முயற்சியைத் துவக்கவும்.
2. ராசி/லக்கினத்திற்கு 7க்குடையவர் (அட்டவணையைப்பார்க்கவும்) தசைஅல்லது புத்தி நடக்கின்றதா என்றோ அல்லது
சுக்கிரன், சந்திரனின் தசையோ,புத்தியோ நடக்கிறதா என்று
பார்க்கவும்.
3. லக்கினாதிபதி நவாம்ச சக்கிரத்தில் இருக்கும் வீட்டில் குரு,
ராகு,கேது,சந்திரன் இவர்களில் ஒருவர் சஞ்சரிக்கும் போதும்
திருமணம் தடையின்றி நடக்கும்.

ராசி/லக்னம் 7க்குடையவர்
மேசம், விருச்சிகம் சுக்கிரன்
ரிஷபம், துலாம் செவ்வாய்
மிதுனம், கன்னி குரு
கடகம், சிம்மம் சனி
தனுசு, மீனம் புதன்
மகரம் சந்திரன்
கும்பம் சூரியன்

 

உங்கள் வருகையை பதிவு செய்யுங்கள்........

உங்கள் உறவினற்களுக்கும் நண்பர்களுக்கும் பரிந்துரைக......

 

 

 

களத்திர பாவம்

களத்திர தோஷங்கள்

திருமணத்தில் தடையை ஏற்படுத்தும் மாங்கல்ய தோஷம், களத்திர தோஷங்கள் பல்வேறு கிரகங்களின் சேர்க்கைகளினால் ஏற்படுபவை முக்கியமான மற்றும் எளிதில் புரிந்து கொள்ளத் தக்கவைகளை மட்டும் இங்கு குறிப்பிடப்படுகிறன்றன.

சுக்கிரன் களத்திரபாவாதிபதி ஆவார். அவர் சர்ப்ப கிரகங்களான ராகுவுடனோ, கேதுவுடனோ சேர்ந்திருந்தாலும், கன்னியில் நீச்சம் அடைந்திருந்தாலும், லக்கினாதிபதிகள் ராகு, கேதுவுடன் இருப்பினும், லக்கினத்திற்கு 8ஆம் இடத்தில் சர்ப்ப கிரகங்கள் இருப்பினும், நீச்சம் பெற்ற ஏழாம் அதிபதியுடன் சுக்கிரன் இணைந்திருந்தாலும், ஏழாம் அதிபதி நீச்சம் அடைந்திருந்தாலும், நீச்சம் பெற்ற கிரகத்துடன் இணைந்து இருந்தாலும் இன்னும் பல கிரகநிலைகளாலும் களத்திர பாவம் பலம் இன்றி திருமணத்தில் தடைகள் ஏற்படும்.

சர்ப்பதோஷம்(நாகதோஷம்)

ராசிச் சக்கரத்தில் லக்கினம், ராசியில் (சந்திரன்) இருக்கும் வீட்டிலேயே ராகு, கேது ஆகிய கிரகங்கள் இருந்தாலும், நவாம்சத்தில் இருந்தாலும் சர்ப்ப தோஷம்.

திருநாகேஸ்வரம், காளகஸ்தி சென்று வரவும். அல்லது ஸ்ரீருக்மணி வல்லப யந்திரம், சர்ப்பதோஷ பரிகாரயந்திரத்தை பூஜித்தும் பலன் அடையலாம்.

மாங்கல்ய தோஷம் பெண்ணின் ஜாதகத்தில் ராசி நிலையில் (ராசிச்சக்கரத்தில்) சூரியனுடன் செவ்வாய் சேர்ந்து எந்த வீட்டில் இருந்தாலும் மாங்கல்ய தோஷத்தைத்தரும், தக்க பரிகாரம் செய்து ஆயுள்பலம் மிக்க ஆண்ஜாதகத்துடன் மட்டுமே சேர்க்க வேண்டும்.

----------------------------

கீழ்வரும் கிரக அமைப்புகள் கொண்ட ஜாதகங்களின் பொதுப் பலன்கள் வரும்மாறு...

1.திருமணம் தடைப்பட்டு தள்ளிப்போகுதல்.

2.திருமணமுயற்சிகள் தோல்வியுறல்

3. திருப்தியில்லாத திருமணவாழ்க்கை.

4. வேற்று இனம், மதத்தில் மணம் முடித்து பின் மணமுறிவு.

5. தகுதியில்லாத இடத்தில் காதல் வயப்படுதல் (பிறரின் மனைவி, கணவன் மேல் ).

6. பருவம் வரும் முன் மனதை பறிகொடுத்து ஏமாற்றம் அடைதல்.

7. திருமண உறவிற்கு சமுதாயத்தால் விலக்கப்பட்ட உறவில் காதல் வயப்படல் (அண்ணன், தங்கை, அத்தை...)

8. சந்தேக குணமுள்ள, கணவன் மனைவி அமைவது.

9.திருமண வாழ்வில் இருவருக்கும் மனநிறைவு இல்லாத, இடைக்காலப்பிரிவுகள் நிறைந்த வாழ்வமைதல்.

10. மக்கட்பேறு இல்லாது வருத்தமடைதல்.

11. கணவன், மனைவியை இழந்தோ அல்லது மணமுறிவ ஏற்பட்டோ இரண்டாம் மணம் அமைதல்.

 

 

   
1
2
6
4
5
3

Designed & Hosted by : Anusi Soft | copyright